சதம் விளாசி லக்னோ அணியை அலறவிட்ட ரஜத் படிதர்: பெங்களூரு அணி அதிரடி வெற்றி
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைப்பெற்ற ஐபிஎல்-லின் பிளே-ஆப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பெங்களூரு அணியை முதலில் பேட்டிங்கில் களமிறங்க அழைத்தது.
இதனைத் தொடர்ந்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது, தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி சொர்ப்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
பிளே-ஆப் சுற்றின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியுமா என அனைவரும் சந்தேகப்பட்ட போது, களத்தில் களமிறங்கிய ரஜத் படிதர், லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் சிதறடித்தார்.
அவர் எதிர்கொண்ட 54 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி 112 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார், இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களை சேர்த்தது.
இதையடுத்து 208 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்க வீரர்களை விரைவிலேயே இழந்தாலும் ஆரம்பம் முதலே சீரான ஓட்டங்களை குவிக்க தொடங்கியது.
லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 79 ஓட்டங்கள் குவித்தார்.
இருப்பினும் பெங்களூரு அணியின் 19 வது ஓவரை வீசிய ஜோஷ் ஹேசில்வுட், கே. எல் ராகுல் மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றியதை தொடர்ந்து லக்னோ அணியின் ஐபிஎல் கோப்பை கனவு காற்றில் கரைந்து போனது.
.@RCBTweets seal a spot in the #TATAIPL 2022 Qualifier 2! ? ?@faf1307 & Co. beat #LSG by 14 runs in the high-scoring Eliminator at the Eden Gardens, Kolkata. ? ?
— IndianPremierLeague (@IPL) May 25, 2022
Scorecard ▶️ https://t.co/cOuFDWIUmk #TATAIPL | #LSGvRCB pic.twitter.com/mOqY5xggUT
20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து லக்னோ அணியால் வெறும் 193 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால், பெங்களூரு அணியிடம் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கூடுதல் செய்திகளுக்கு: தவறுகளுக்கு முழு பொறுப்பேற்கிறேன்...பகிரங்க மன்னிப்பு கோரிய பிரதமர் போரிஸ் ஜான்சன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வென்றதன் முலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்-லின் இரண்டாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
பெங்களூரு அணிக்காக 112 ஓட்டங்கள் விளாசிய ரஜத் படிதர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.