பவுண்டரிகளால் பிளந்துகட்டிய டி காக்: டெல்லி அணியை அலறவிட்ட லக்னோ அணி!
ஐபிஎல்-லில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் 15வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இன்று மோதின.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்கள் சேர்த்து இருந்தது.
Young Badoni finishes things off in style.@LucknowIPL win by 6 wickets and register their third win on the trot in #TATAIPL.
— IndianPremierLeague (@IPL) April 7, 2022
Scorecard - https://t.co/RH4VDWYbeX #LSGvDC #TATAIPL pic.twitter.com/ZzgYMSxlsw
டெல்லி அணியின் பேட்டிங்கில் பொறுத்தவரை ஓப்பனிங்கில் களமிறங்கிய பிருத்வி ஷா அதிரடியாக விளையாண்டு 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதையடுத்து 150 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய லக்னோ அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 155 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.
லக்னோ அணியை பொறுத்தவரை தொடக்கத்தில் களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் கேஎல் ராகுல் 24 ஓட்டங்களில் வெளியேற மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக்சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 80 ஓட்டங்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
பந்துவீச்சை பொறுத்தவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அந்த அணியின் வீரர் குயின்டன் டி காக் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.
ஜடேஜாவை கேப்டன்சி செய்ய வழிவிடுங்கள் தோனி: முன்னாள் CSK வீரர் குற்றச்சாட்டு!