மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் திரில் வெற்றி: அக்சர் படேல் அதிரடி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதி நிமிடத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணியளவில் எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யவே, பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் குவித்தது.
முன்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 81 ரன்களும், அவரை தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா 32 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் குவித்து இருந்தனர்.
டெல்லி அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை, அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், கலீல் அஹமத் 27 விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
178 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 179 ரன்களை குவித்து திரில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் அதிகபட்சமாக லலித் யாதவ் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களும், அக்சர் படேல்17 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களும் குவித்துள்ளனர்.
மேலும் இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார்.
டெல்லி அணி: ப்ரித்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி
மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, அன்மோல்பிரீத் சிங், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி