டெல்லியை ஓடவிட்ட தினேஷ் கார்த்திக்: வெற்றிக்கணக்கை தொடரும் ராயல் சேலஞ்சர்ஸ்!
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 27வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்க பெங்களூரு அணியை அழைத்தது.
இதைத்தொடர்ந்து முதலில் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கமே அடுத்தடுத்து முக்கிய விக்கெட்களை இழந்து பரிதவித்த நிலையில், களத்தில் இறங்கிய மேக்ஸ்வெல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார்.
Eat. Sleep. #PlayBold. Repeat.@RCBTweets were on ? in all departments of the #Epic #TATAIPL ⚔️ .
— Star Sports (@StarSportsIndia) April 16, 2022
Which player made you go ? in #DCvRCB?#YehAbNormalHai #IPL2022 pic.twitter.com/tfz9Ns9YCd
இருப்பினும் அணியின் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்கவே 6 விக்கெட்-க்கு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக தனது மட்டையை சுழற்றி 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என 66 ஓட்டங்களை குவித்தார்.
இதனால் பெங்களூரு அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை குவித்து இருந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்ததால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியது.
டெல்லி அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களை சேர்த்து இருந்தார்.
இப்படியொரு யாக்கரா...வாய்பிளந்த ரசிகர்கள்: துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்த டேல் ஸ்டெய்ன்!
பந்துவீச்சை பொறுத்தவரை பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் Josh Hazlewood 4 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
இந்தப்போட்டியில் அதிரடியாக விளையாண்ட பெங்களூரு அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.