தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்: பெங்களூரு அணி திரில் வெற்றி!
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்-கின் அதிரடியால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
2022ம் ஆண்டுக்கான 13வது ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானம் இன்று மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை குவித்து இருந்தது.
இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 70 ஓட்டங்கள் சேர்த்து இருந்தார், பந்துவீச்சை பொறுத்தவரை பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் படேல் 18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனைதொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1வது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை குவித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது.
பெங்களூரு அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதில் ஷாபாஸ் அகமது 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர்களுடன் 44 ஓட்டங்கள் குவித்தனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
தோல்வியின் விளிம்பில் சென்ற பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் அதிரடியால் வெற்றியை கைப்பற்றிய நிலையில் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.