ஹெட்மயர் சிக்ஸரில் சாஹல் சுழலில்... திணறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:ராஜஸ்தான் திரில் வெற்றி!
ஐபிஎல்-லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்துகொண்டனர்.
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இந்த ஆண்டு கடைபிடிக்கப்படும் சம்பரதாயமான பந்துவீச்சையே தேர்ந்தெடுத்தது.
WHAT. A. GAME! ? ?@rajasthanroyals return to winning ways after edging out #LSG by 3 runs in a last-over finish. ? ?
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
Scorecard ? https://t.co/8itDSZ2mu7#TATAIPL | #RRvLSG pic.twitter.com/HzfwnDevS9
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை சேர்த்தது, ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அதிகபட்சமாக ஹெட்மயர் மட்டுமே 6 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 59 ஓட்டங்களை சேர்த்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை பறிகொடுக்கவே 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் தோல்வியை சந்தித்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் மட்டும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியால் 11 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் எதிரணியின் நான்கு விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார்.