கொல்கத்தா அணியை சுக்குநூறாக நொறுக்கிய சாஹல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை முதல் பேட்டிங்கில் களமிறங்க அழைத்ததை தொடர்ந்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்களை அதிரடியாக குவித்தது.
WHAT. A. GAME! WHAT. A. FINISH! ? ?
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
The 1⃣5⃣-year celebration of the IPL done right, courtesy a cracker of a match! ? ?@rajasthanroyals hold their nerve to seal a thrilling win over #KKR. ? ?
Scorecard ▶️ https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR pic.twitter.com/c2gFuwobFg
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கவிட்டு 61 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் என 103 ஓட்டங்கள் எடுத்து அணியை மிகவும் வலுவான நிலைக்கு எடுத்துச்சென்றார்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய கொல்கத்தா அணி கடுமையாக போராடியும் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தோல்வியை தழுவியது.
கொல்கத்தா அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரக களமிறங்கிய ஆரோன் பின்ச் 28 பந்துகளில் 58 ஓட்டங்களும், கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 85 ஓட்டங்களும் சேர்த்து அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.
இருப்பினும் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து வீழ்ந்த நான்கு விக்கெட்களால் கொல்கத்தா அணியின் வெற்றி கைநழுவிப் போனது.
நம்ம ரெய்னாவா இப்படி பண்ணாரு... ஒற்றை டிவீட்டால் நொந்து போன சென்னை ரசிகர்கள்!
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஒரே ஒவரில் நான்கு விக்கெட்களை தட்டிதூக்கிய ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார்.