சஞ்சு சாம்சன் அதிரடியில் வீழ்ந்த ஹைதராபாத் அணி: ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் 5வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு மோதின.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்கள் குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ஓட்டங்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை உம்ரன் மாலிக் அதிகபட்சமாக 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் 41 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்து இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியின் பிரசித்தி கிருஷ்ணா 4 ஓவர்களில் 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றுள்ளார்.
இலங்கை வீரர் சாதனையை முறியடித்த சென்னை வீரர்: குவியும் பாராட்டுக்கள்!