லக்னோவை மிரட்டிய திவாட்டியா! கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி

IPL2022 LSGvsGT LucknowSuperGaints GujaratTitans Rahul Tewatia
By Ragavan Mar 28, 2022 07:27 PM GMT
Report

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15-வது சீசனின் நான்காவது ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் களமிறங்கினர்.

அதிரடி காட்ட முயற்சித்த கில் துஷ்மந்தா சமீரா வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து அடுத்த ஓவரின் முதல் பந்தில் சிறப்பான யார்க்கர் பந்து மூலம் விஜய் சங்கரை (4) போல்டாக்கினார் சமீரா.

முதல் மூன்று ஓவர்களில் லக்னோவை தட்டிவைத்த ஷமி! மிரட்டிச்சென்ற ஹூடா, பதோனி..

லக்னோவை மிரட்டிய திவாட்டியா! கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | Ipl2022 Tewatia Gujarat Titans Lucknow Lsg Gt

அடுத்து களமிறங்கிய கேப்டன் பாண்டியா வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை சற்று தணித்தார். வேட் மற்றும் பாண்டியா சற்று பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ஓட்டங்கள் எடுத்து நல்ல நிலையை வந்தடைந்தது.

இதன்பிறகு, கிருனால் பாண்டியா பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற ஹார்திக் பாண்டியா 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடாவின் அடுத்த ஓவரிலேயே மேத்யூ வேடும் 30 ஓட்டங்களில் போல்டானார்.

இதன்பிறகு, சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் கேஎல் ராகுல். இதனால், 10 முதல் 15 ஓவர்கள் வரை குஜராத்தால் 19 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக கடைசி 5 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 68 ஓட்டங்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது.

லக்னோவை மிரட்டிய திவாட்டியா! கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | Ipl2022 Tewatia Gujarat Titans Lucknow Lsg Gt

இந்த சூழலில் தான் கேப்டனாக ராகுல் சில தவறுகளை செய்தார். மீண்டும் சுழற்பந்துவீச்சாளரான ஹூடாவிடமே பந்தைக் கொடுக்க, இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட ராகுல் திவாட்டியா அடுத்தடுத்து சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார். அதே ஓவரில் டேவிட் மில்லரும் தன் பங்குக்கு அடுத்தடுத்து 1 பவுண்டரியும், 1 சிக்ஸரையும் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 22 ஓட்டங்கள் கிடைக்க கடைசி 4 ஓவரில் 46 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது.

சாதுரியமாக முடிவெடுத்திருக்கவேண்டிய இந்த நிலையில், மீண்டும் ரவி பிஷ்னாயிடமே பந்தைக் கொடுத்தார் ராகுல். இந்த ஓவரை சிக்ஸருடன் தொடங்கினார் திவாட்டியா கடைசி 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். இந்த ஓவரில் 17 ஓட்டங்கள் கிடைக்க கடைசி 3 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 29 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன.

ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் மில்லரை சிக்ஸர் அடிக்க விட்டாலும், அடுத்த பந்திலேயே அவரை ஆட்டமிழக்கச் செய்தார். மில்லர் 21 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். 19-வது ஓவரை வீசிய சமீரா முதல் பந்திலும், 5-வது பந்தில் பவுண்டரி கொடுத்தாலும் அந்த ஓவரில் மொத்தம் 9 ஓட்டங்கள் மட்டுமே குஜராத்தால் எடுக்க முடிந்தது.

மேக்ஸ்வெல், வினி ராமன் திருமணம்: வைரலாகும் தமிழ் பாரம்பரிய திருமண சடங்கு வீடியோ காட்சிகள்! 

லக்னோவை மிரட்டிய திவாட்டியா! கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | Ipl2022 Tewatia Gujarat Titans Lucknow Lsg Gt

கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய முதலிரண்டு பந்துகளை சதரங்கபானி பவுண்டரிக்கு விளாச லக்னௌ தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி திவாட்டியா வெற்றியை உறுதி செய்தார். 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திவாட்டியா 24 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தார். சதரங்கபானி 7 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்தார்.

Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US