லக்னோவை புரட்டி எடுத்த சிக்கந்தர் ராசா: த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி உள்ளது.
விடாமல் போராடிய கே.எல் ராகுல்
ஐபிஎல்-லின் 21 வது லீக் போட்டி லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல் ராகுல் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர்களுடன் 74 ஓட்டங்கள் குவித்தார்.
.@krunalpandya24 finds a breakthrough for #LSG but @PunjabKingsIPL need 61 off 42 now!
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
This game is evenly poised! ??
Follow the match ▶️ https://t.co/OHcd6VfDps #TATAIPL | #LSGvPBKS pic.twitter.com/qX3vBJG3yh
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்கள் குவித்தது.
த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்
160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் அதர்வ தைடே ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும், பிரப்சிம்ரன் சிங் 4 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர்.
What a fantastic chase from @PunjabKingsIPL! Shahrukh Khan oozed confidence in the final over and Sikandar Raza played a crucial knock. Another thrilling finish in #TATAIPL. ?#LSGvPBKS pic.twitter.com/YOzyvtJOMK
— Mithali Raj (@M_Raj03) April 15, 2023
இதனை தொடர்ந்து களமிறங்கிய மத்தேயு ஷார்ட் 34 ஓட்டங்களும் சிக்கந்தர் ராசா 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 57 ஓட்டங்களும் குவித்தனர்.
இருப்பினும் மறுப்புறம் விக்கெட்டுகள் மலமலவேன சரியத் தொடங்கின. ஆனால் இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஷாருக்கான் 10 பந்துகளில் 23 ஓட்டங்கள் குவித்து பஞ்சாப் அணியை வெற்றி அடைய செய்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்கள் குவித்தது, இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
Nicky P has a front-row seat to the Raza show! ? ?#LSGvPBKS #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/fFcEcrIl5n
— Punjab Kings (@PunjabKingsIPL) April 15, 2023