ருத்ர தாண்டவம் ஆடிய சாம்சன், ஹெட்மையர் ஜோடி: குஜராத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத்
ஐபிஎல்-லின் 23வது லீக் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது, இதில் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், குஜராத் டைட்டன்ஸ் முதல் பேட்டிங்கில் களமிறங்கியது.
A cracking FIFTY for @IamSanjuSamson ??...
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
... but he departs soon after as @gujarat_titans' Impact Player Noor Ahmad strikes ? ?#RR 114/5 after 15 overs in the chase!
Follow the match ? https://t.co/nvoo5Sl96y#TATAIPL | #GTvRR pic.twitter.com/OlyByPG9pj
தொடக்க வீரரான சுப்மன் கில் எதிர்கொண்ட 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 45 ஓட்டங்களும், மில்லர் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 46 ஓட்டங்களும் அதிகப்பட்சமாக குவித்தனர்.
இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்கள் மொத்தமாக குவித்தது.
துரத்தி பிடித்த ராஜஸ்தான்
இதையடுத்து 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 1 ஓட்டத்துடனும், ஜோஸ் பட்லர் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் களத்திற்கு வந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் அதிரடியாக 60 ஓட்டங்கள் சேர்த்தார்.
Get the crowd some helmets! ?@IAmSanjuSamson took the attack to @gujarat_titans with a brutal bat-trick of 6s!
— Star Sports (@StarSportsIndia) April 16, 2023
Tune-in to #GTvRR at #IPLonStar, LIVE now on Star Sports Network#BetterTogetherpic.twitter.com/Zl21o6v0vC
பின்னர் வந்த ஷிம்ரோன் ஹெட்மையர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் 56 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் குஜராத் அணி 19.2 ஓவர்கள் முடிவிலேயே 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 179 ஓட்டங்கள் சேர்த்தது.
மேலும் இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.