அரைசதம் விளாசிய டேவிட் வார்னர்: கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் த்ரில் வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
#IPL2023 #DCvsKKR
— News18 CricketNext (@cricketnext) April 20, 2023
IPL 2023 DC vs KKR in Photos: https://t.co/u6svZffZpY pic.twitter.com/AwsVDNFwbg
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லிட்டன் தாஸ்(4), வெங்கடேச ஐயர்(0), நிதிஷ் ராணா(4), மந்தீப்(12) மற்றும் ரிங்கு சிங்(6) என முன்கள வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய் 39 பந்துகளை எதிர்கொண்டு 43 ஓட்டங்களும், 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஸ்ஸல் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 38 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
வார்னர் அரை சதம்
இதையடுத்து 128 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் நீண்ட நேரம் நிலைத்து நின்று போராடினார்.
41 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் 11 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் சேர்த்து இருந்த நிலையில், சக்கரவர்த்தி வீசிய 14 ஓவரின் முதல் பந்தில் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
டெல்லி அணியின் மற்ற முன்கள வீரர்கள் பிருத்வி ஷா(13) மிட்செல் மார்ஷ்(2), பிலிப் சால்ட்(5) ஹக்கீம் கான்(0) மற்றும் மணீஷ் பாண்டே (21) என சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
This moment, this moment is what we call HAPPINESS ??pic.twitter.com/6AeGnyDxsx
— Delhi Capitals (@DelhiCapitals) April 20, 2023
களத்தில் நின்ற அக்சர் படேல் 22 பந்துகளில் 19 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 128 ஓட்டங்களை அடைந்தது.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.