சரணடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த மும்பை
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது, கேப்டன் ரோகித் சர்மா 28 ஓட்டங்களும், இஷான் கிஷன் 38 ஓட்டங்களும் எடுத்து மும்பை அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அத்துடன் பின்னர் வந்த கிரீன் சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 40 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை வெற்றி
சற்று மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் முன்னணி வீரர்கள் ராகுல் திரிபாதி, ஹரி புரூக், கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டும் நீண்ட நேரம் நின்று போராடினார், 41 பந்துகளை எதிர்கொண்ட அவர 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 48 ஓட்டங்கள் சேர்த்தார்.
ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 ஓட்டங்கள் குவித்தார்.
இருப்பினும் 19.5 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே மொத்தமாக சேர்க்க முடிந்தது.
இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
A special moment for young Arjun Tendulkar, who gets his first wicket in #TATAIPL and it is his captain Rohit Sharma, who takes the catch of Bhuvneshwar Kumar.
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Arjun takes the final wicket and @mipaltan win by 14 runs. pic.twitter.com/1jAa2kBm0Z