அர்ஷ்தீப் சிங் பந்தில் தெறித்த ஸ்டெம்புகள்..!மும்பையை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி
ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய பஞ்சாப்
மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்கள வீரர்கள் பிரப்சிம்ரன் (26 ஓட்டங்கள் ) அதர்வ தைடே(29 ஓட்டங்கள) ஆகியோர் ஓரளவு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், பின்னர் வந்த ஹர்பிரீத் சிங், கேப்டன் சாம் கர்ரன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஹர்பிரீத் சிங் 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 41 ஓட்டங்கள் குவித்தார், கேப்டன் சாம் குர்ரன் 29 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்கள் விளாசி 55 ஓட்டங்கள் குவித்தார்.
அத்துடன் 7 விக்கெட்டுக்கு களத்திற்கு வந்த ஜிதேஷ் ஷர்மா 7 பந்துகளில் 4 சிக்சர்கள் விளாசி 25 ஓட்டங்கள் அதிரடியாக சேர்த்தார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்தது.
மிரட்டிய மும்பை அணி
கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 44 ஓட்டங்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
மேலும் பின்னர் வந்த கேமரூன் கிரீன் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 67 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 57 ஓட்டங்களையும் குவித்தனர்.
Unbelievable hitting ?@surya_14kumar with a sublime FIFTY ?
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
Going down to the wire this!
Follow the match ▶️ https://t.co/FfkwVPpj3s#TATAIPL | #MIvPBKS pic.twitter.com/GRPSX4LGi3
பின் களத்திற்கு வந்த டிம் டேவிட்-டும் தன்னுடைய பங்கிற்கு 13 பந்துகளில் 25 ஓட்டங்களை சேர்த்தார்.
இருப்பினும் கடைசி சில ஓவர்களை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசியதால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
Press F to pay respect to the stumps ☠️#MIvPBKS #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/Us3mjuB9Zr
— Punjab Kings (@PunjabKingsIPL) April 22, 2023
இதன் மூலம் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது.
Thriller ✅
— Punjab Kings (@PunjabKingsIPL) April 22, 2023
Broke stumps ✅
Win at Wankhede ✅#JazbaHaiPunjabi #SaddaPunjab #PunjabKings #TATAIPL #MIvPBKS pic.twitter.com/n875Tg1nI0