வெற்றிக்காக போராடிய சன்ரைசர்ஸ்: இறுதியில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ்
ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த டெல்லி
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று இன்றைய ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டலஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
? WHAT. IT. MEANS. ?#YehHaiNayiDilli #IPL2023 #SRHvDC @davidwarner31 pic.twitter.com/gfT5pjRBR3
— Delhi Capitals (@DelhiCapitals) April 24, 2023
டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் விளாசி 34 ஓட்டங்களும், அக்சர் படேல் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 34 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் குவித்தது.
போராடிய சன்ரைசர்ஸ்
145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் விளாசி 49 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால் ஹரி புரூக், ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கேப்டன் மார்க்ரம் போன்ற மற்ற வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் வெற்றி இலக்கை அடைவதில் சன்ரைசர்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் ஹென்ரிச் கிளாசென் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசி 31 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி 24 ஓட்டங்களும் குவித்து அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடினர்.
We are 58/1 midway. pic.twitter.com/eDG4nzpThJ
— SunRisers Hyderabad (@SunRisers) April 24, 2023
ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.