சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்: ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!
சூர்யகுமார் யாதவ் சதத்தால் மும்பை அணி ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை-ஐதராபாத் அணிகள் மோதல்
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை அணி ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது.
மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி சிறப்பாக தொடங்கினர்.
? & winning runs in style
— IndianPremierLeague (@IPL) May 6, 2024
Suryakumar Yadav hits a maximum to bring up his century ?
Watch the recap on @StarSportsIndia and @JioCinema ??#TATAIPL | #MIvSRH | @mipaltan pic.twitter.com/RlaOZ8l2i0
ஆனால், அபிஷேக் சர்மா (11), மயங்க் அகர்வால் (5), நிதிஷ் ரெட்டி (20) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஹெட் 48 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அதிரடியாக விளையாட எதிர்பார்க்கப்பட்ட ஹெய்ன்ரிச் கிளாசன் 2 ஓட்டங்களிலேயே ஏமாற்றம் அளித்தார்.
கடைசி ஓவர்களில் கேப்டன் கம்மின்ஸ் (35) அதிரடியாக விளையாடி 2 சிக்சர்கள் உட்பட ஓட்டங்களை சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்த ஐதராபாத் அணி 173 ஓட்டங்கள் சேர்த்தது.
மிரட்டிய சூர்யகுமார் யாதவ்
174 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (9), ரோஹித் சர்மா (4) மற்றும் நமன் திர் (0) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
4.1 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.
அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி பொறுப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தது. திலக் வர்மா ஒரு நாள் போட்டி பாணியில் விளையாடினார்.
The captain is optimistic heading into our run of home games ??️#PlayWithFire #MIvSRH pic.twitter.com/iFaAXMCogq
— SunRisers Hyderabad (@SunRisers) May 6, 2024
மறுபுறம், சூர்யகுமார் யாதவ் சிக்சர், பவுண்டரி என அபாரமாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
51 பந்துகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் உட்பட 102 ஓட்டங்கள் எடுத்தார். திலக் வர்மா 37 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 10 வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு முன்னேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |