கடைசி பந்தில் த்ரில்! ஹைதராபாத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதல்
நடப்பு ஐபிஎல் சீசனின் 50 வது லீக் போட்டியில், ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மோதலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
#TATAIPL Matches ?
— IndianPremierLeague (@IPL) May 2, 2024
↳ Last Ball Thrillers ?
Bhuvneshwar Kumar wins it for @SunRisers ??
Recap the Match on @StarSportsIndia and @JioCinema ??#SRHvRR pic.twitter.com/mHdbR2K3SH
ஹைதராபாத் அணியில் நிதிஷ் ரெட்டி (76 ஓட்டங்கள்), ஹெட் (58 ஓட்டங்கள்) மற்றும் கிளாசன் (42 ஓட்டங்கள்) குவித்து அணியை வலுப்படுத்தினர்.
விடாமல் போராடிய ராஜஸ்தான்
200 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு, தொடக்கத்தில் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர்.
ஆனால், ஜெய்ஸ்வால் (67 ஓட்டங்கள்) மற்றும் ரியான் பராக் (77 ஓட்டங்கள்) நிலைத்து விளையாடி 134 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
.@rajasthanroyals get the prized wicket of Travis Head ?
— IndianPremierLeague (@IPL) May 2, 2024
Avesh Khan gets his 2️⃣nd wicket of the night ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #SRHvRR pic.twitter.com/xc143RT24z
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஹைதராபாத்திற்கு வெற்றியை தேடி தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |