IPLயில் அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு: கேப்டன் இவரா? ரசிகர்கள் உற்சாகம்
IPLலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணிக்கு அகமதாபாத் டைட்டன்ஸ் என்ற பெயரை உறுதிசெய்துள்ளனர். மேலும் அந்த அணியை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தலைமை தங்குவார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
IPLலில் இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் என்ற அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நடத்தப்படும் போட்டிகளும் 74 அக உயர்ந்துள்ளது.
புதிதாக அணிகள் இணைக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு IPL வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பழைய அணிகள் தங்களிடம் உள்ள 4 வீரர்கள் வரை தக்கவைத்து கொண்டு மீதமுள்ள வீரர்களை ஏலத்திற்கு விடுவித்துள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக இணைக்கப்பட்ட இரு அணிகளுக்கும், விடுவிக்கப்பட்ட வீரர்களில் இருந்து முன்று வீரர்களை ஏலத்திற்கு முன்பே எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதில் லக்னோ அணி கே.எல். ராகுல் 15 கோடிக்கும், ரஷீத் கான் 15 கோடிக்கும், கில் 8 கோடிக்கும் வீரர்களை எடுத்து இருந்தது.
அகமதாபாத் அணி பாண்டியாவை 17 கோடிக்கும்,ஸ்டோனிஸ் 9.2 கோடிக்கும்,ரவி பிஷ்ணோய் 4 கோடிக்கும் எடுத்துள்ளது.
மீதமுள்ள வீரர்களுக்கு இந்த மாதம் 12 மற்றும் 13 திகதிகளில் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய அணிகள் வீரர்களை எடுத்த நிலையில் அந்த அணிகளின் அதிகாரப்பூர்வ பெயர்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் லக்னோ அணிக்கு Lucknow super giants என்ற பெயரும், அந்த அணியை கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மற்றொரு அணியான அகமதாபாத் அணி பெயர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அந்த அணிக்கு அகமதாபாத் டைட்டன்ஸ் என்ற பெயர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த அணியை ஹர்டிக் பாண்டியா தலைமை தாங்குவார் எனவும் அறிவித்துள்ளனர்.
???? ????? ?? ??? ?????????? ?????? ?? ????????? ??????
— AHMEDABAD TITANS (@Ipl_ahmedabaad) February 7, 2022
It Is Officially Announced That Hadik Pandya Will Be Our Captain ?. #HardikPandya #IPLAuction2022 pic.twitter.com/J91g9Ui2sE
— AHMEDABAD TITANS (@Ipl_ahmedabaad) January 21, 2022