90-ஸ் கிட்ஸ்களின் வாழ்வோடு கலந்த MP3 ப்ளேயருக்கு இனி குட்பை! ஆப்பிள் அதிரடி அறிவிப்பு
ஐபாட் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் நிறுத்துகிறது.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் இனி ஐபாட்களை தயாரிக்க போவதில்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபாட்கள் இருக்கும் வரை நீங்கள் அவற்றை வாங்க முடியும் என்றும் கூறியுள்ளது.
அக்டோபர் 23, 2001ல், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் ஐபாட்டை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இதை அறிமுகப்படுத்தியதில் இருந்து தற்போது வரை 21 ஆண்டு ஆகிறது. இது ஆப்பிள் கேஜெட்களில் மிகவும் பழமையானது.
இதற்கடுத்து வெளிவந்த பல கேட்ஜெட்கள் நவீன தொழில்நுட்பத்துடன் வந்ததால், ஐபாட்டுக்கான மதிப்பு குறைந்து விட்டது. இப்போது இறுதியாக ஐபாட் விடைபெறுவதற்கான நேரமும் வந்துவிட்டது.
எனவே ஆப்பிள் நிறுவனம் இனி ஐபாட்களை தயாரிக்க போவதில்லை என்று தெரிவித்தது. OG ஐபாட் 1,000 பாடல்கள் மற்றும் 10-மணி நேர பேட்டரியை சேமிக்கும் முதல் MP3 பிளேயர் ஆகும்.
குறிப்பாக , 80’s, 90's கிட்ஸ்களின் பொக்கிஷமாக இந்த ஐபாட் இருந்து வந்தது. இப்போதெல்லாம் எப்படி நாம் ஸ்மார்ட் போனுடன் உறங்குகிறமோ, அதே போன்று அப்போதெல்லாம் ஐபாட் உடன் தான் பலர் தூங்கி வந்தனர்.
அந்த அளவிற்கு அவர்களின் வாழ்வில் ஆப்பிள் ஐபாட் மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. முதல் முதலாக "உங்கள் பாக்கெட்டில் 1,000 பாடல்கள்" என்கிற முழக்கத்துடன் ஆப்பிள் ஐபாட் வெளியிடப்பட்டது.
ஐபாட்டின் உற்பத்தியை நிறுத்தியது குறித்து நெட்டிசன்கள் பலர் உணர்வு பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.