யுபிஎஸ்சி நேர்காணலின் போது அதிர்ச்சியூட்டும் பதிலை கூறிய ஐபிஎஸ் அதிகாரி
ஐபிஎஸ் அதிகாரி பிஐடி மெஸ்ரா அலுமினா யுபிஎஸ்சி நேர்காணலின் போது குழு உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியூட்டும் பதில் அளித்துள்ளார்.
யார் அவர்?
ஐபிஎஸ் சக்தி மோகன் அவஸ்தி ஜூன் 7, 1993 அன்று பிறந்தார், தற்போது அவருக்கு 32 வயது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் ஷீல் மோகன் அவஸ்தி.
இவர் லக்னோவில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் பீகாரில் உள்ள பிஐடி மெஸ்ராவில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக். பட்டம் பெற்றார். சக்தி மோகன் அவஸ்தி பொறியியலில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறுவதற்காக யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.
அவர் மூன்று முறை முயற்சித்து, இறுதியாக 2019 இல் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். தனது முதல் முயற்சியிலேயே, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார், ஆனால் நேர்காணல் சுற்றில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இரண்டாவது முயற்சியில், இந்திய வருவாய்ப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், சக்தி தனது ஐபிஎஸ் கனவை அடைய விரும்பினார். இறுதியாக மூன்றாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 154வது இடத்தைப் பிடித்து, ஐபிஎஸ் அதிகாரியானார்.
அவரது நேர்காணல் சுற்றில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. சக்தியின் முகம் முகம் நடிகர் ஷர்மன் ஜோஷியைப் போலவே இருப்பதால், '3 இடியட்ஸ்' படத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று குழு உறுப்பினர் அவரிடம் கேட்டனர்.
அதற்கு சக்தி, 'ஆம், பார்த்தேன்' என்று பதிலளித்தவுடன் ஷர்மன் ஜோஷியின் நேர்காணல் காட்சியை படத்தில் இருந்து விவரிக்கும்படி குழு அவரிடம் கேட்டது.
முழு காட்சியையும் விவரித்த சக்தி இறுதியாக ஷர்மான் ஜோஷி தனது நேர்காணல் குழுவிடம் சொல்லும் அதே வார்த்தைகளைச் சொன்னார்.
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் 190 மதிப்பெண்களைப் பெற்று இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தார் என்றும் கூறினார் சக்தி.
ஐபிஎஸ் சக்தி மோகன் அவஸ்தி தற்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் துணை காவல் ஆணையராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் அசாம்கர் மற்றும் மொராதாபாத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) உட்பட குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |