iQOO 13 முதல் OnePlus 13 வரை., டிசம்பர் 2024-ல் அறிமுகமாகவுள்ள முக்கிய ஸ்மார்ட்போன்கள்
2024-ஆம் ஆண்டு முடிவடைய போவதை முன்னிட்டு, டிசம்பர் மாதம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் iQOO, Vivo, Xiaomi போன்ற பிராண்டுகள் தங்கள் புதிய தயாரிப்புகளுடன் களமிறங்க உள்ளன.
iQOO 13
டிசம்பர் 3-ஆம் திகதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் iQOO 13 மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இது ஸ்னாப்டிராகன் 8 எலிட் சிப் செட் மூலம் சக்திவாய்ந்த செயல்திறனையும், உயர் தரக் கட்டமைப்பையும் வழங்கவுள்ளது.
iQOO 13-ல் IP68/IP69 தரத்தை கொண்ட water- and dust-resistant கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் RGB LED illumination விளக்குகளுடன் சிறந்த டிசைன் மற்றும் சிறப்பான Camera இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 14 Series
டிசம்பர் 9-ஆம் திகதி Redmi Note 14 தொடர் இந்தியாவில் அறிமுகமாகும். இதில் Note 14 Pro, Note 14 மற்றும் Note 14 Pro+ ஆகிய மாடல்கள் உள்ளன.
இதில் 120 Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் 6.67 இன்ச் OLED திரை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், Redmi Note 14 Pro-வில் MediaTek Dimensity 7300-Ultra chipset, Redmi Note 14-ல் MediaTek Dimensity 7025 Ultra மற்றும் Note 14 Pro+-ல் Snapdragon 7s Gen 3 chipset இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vivo X200 series
Vivo X200 மற்றும் X200 Pro மாடல்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளன.
இந்த புதிய flagship series-ல் MediaTek Dimensity flagship chipset மற்றும் சக்திவாய்ந்த Zeiss Optics camera-க்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
OnePlus 13
OnePlus 13 டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி 2025 முதல் இந்தியாவில் கிடைக்கலாம்.
இந்த மொபைலில் 120 Hz refresh rate கொண்ட, 1,600 nits முதல் 4,500 nits brightest வரை தரக்கூடிய 6.82-inch display இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 6,000mAh பேட்டரி மற்றும் 100W வயர்ட் சார்ஜிங் கொடுக்கப்படவுள்ளது.
இந்த மொபைல் Android 15 அடிப்படையிலான OxygenOS 15, Snapdragon 8 Elite chipset-உடன் வரும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் டிசம்பர் மாதத்தை தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு வெகுவாக கவரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |