iQOO Neo 10R அடுத்த மாதம் அறிமுகம்., முக்கிய அம்சங்கள் என்னென்ன?
iQOO நிறுவனத்தின் புதிய Neo 10R 5G ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Paras Guglani எனும் பிரபல டிப்ஸ்டர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
iQOO Neo 10R Mid Range சந்தையை நோக்கி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iQOO Neo 10R முக்கிய அம்சங்கள்
iQOO Neo 10R மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 144Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் காணப்படும்.
இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8s Gen 3 சிப்செட்டால் செயல்படும். இது 12GB RAM மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் கூடியதாக இருக்கும்.
Camera
பின்புறத்தில் 50 மெகாபிக்சல் Sony LYT-600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு லென்சுடன் கூடிய இரட்டை கேமரா அமைப்பு இருக்கும். முன்புறம், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்படும்.
பேட்டரி மற்றும் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போனில் 6,400mAh பேட்டரியும், 80W அதிவேக சார்ஜிங் வசதியும் இருக்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
இந்த மாடல் ரூ. 30,000க்கு கீழ் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Poco X7 Pro மற்றும் Redmi Note 14 Pro+ போன்ற மாடல்களுடன் போட்டியிடும்.
iQOO Neo 10R மாடல் அதன் சிறந்த அம்சங்களுடன் மத்திய வரிசை சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iQOO Neo 10R price, features, and more