IQOO நிறுவனத்தின் புதிய Z Series Smartphone.., வெளியீட்டு திகதி அறிவிப்பு
IQOO நிறுவனம் தனது புதிய Z Series Smartphone மார்ச் 12-ம் திகதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளது.
முன்னதாக இந்த Smartphone-ன் டீசர்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் அறிமுக தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய IQOO Z9 Smartphone அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய IQOO Z7 மாடலின் மேம்பட்ட Version ஆகும்.
இதன் சிறப்பம்சங்கள்
இதுவரை வெளியிடப்பட்ட டீசர்களில் இந்த Smartphone Dual camera sensors, Smartphone Back button மற்றும் green colour கொண்டிருப்பது உறுதியானது.
இத்துடன் இந்த பிரிவில் MediaTek Dementia 7200 processor கொண்ட முதல் Smartphone என்ற பெருமையை IQOO Z9 பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த Smartphone Benchmark பரிசோதனைகளில் 734000 புள்ளிகளை பெற்றிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
இந்த Smartphone I2302 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பதும், இதில் 7200 Processor, Android 14 OS,8 GB RAM உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதவிர புதிய IQOO Z9 Smartphone 1.5K OLED Display மற்றும் 6000 mAh Battery கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய IQOO Z9 Smartphone Amazon மற்றும் IQOO வலைதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |