சுவிஸ் தூதர்கள் இருவர் மரணத்தில் ஈரான் மீது சந்தேகம்... படுகொலை என உளவுத்துறை
ஈரானில் சுவிஸ் தூதர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சுவிட்சர்லாந்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்காக பணியாற்றுவதாக
கடந்த நான்கு ஆண்டுகளில் ஈரானில் இரண்டு சுவிஸ் தூதர்கள் மற்றும் ஒரு சுற்றுலாப் பயணி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்தது, அத்துடன் தூதரக ஊழியர் ஒருவர் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களை அடுத்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், ஈரானில் செயல்படும் சுவிஸ் தூதரகமானது அமெரிக்காவிற்காக பணியாற்றுவதாக ஈரான் நிர்வாகம் நம்புகிறது. கடந்த 2021ல் ஈரானுக்கான சுவிஸ் துணைத் தூதர் Sylvie Brunner தாம் தங்கியிருந்த குடியிருப்பின் 17வது மாடியின் பால்கனியில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், சில தூதரக ஊழியர்கள் அமெரிக்க உளவுத்துறைக்காக பணியாற்றுவதாகவே ஈரான் நம்புகிறது என IRGC-ன் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரன்னரின் மரணம் தவறாக நடந்த ஒரு உளவுப் பணி, ஆனால் ஈரானிய அதிகாரிகள் அந்த மரணத்தை தற்கொலை என்று முடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெஹ்ரானில் உள்ள ஒரு ஹொட்டலில் சரிந்து விழுந்து, தலை மற்றும் வயிற்றில் பலத்த காயங்களால் அவதிப்பட்டு, வீட்டிற்கு திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.
மிக முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்த அந்த நபர், ஈரான் அதிகாரிகளிடம் சிக்கியிருக்கலாம் என்றும், அவரது மரணமும் இயற்கையாகவே நடந்ததாக ஈரான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2023 செப்டம்பரில் இன்னொரு சுவிஸ் தூதரக ஊழியர் மர்மமான முறையில் தாக்கப்பட, அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
ஆனால் அவர் மீது நடத்தப்பட்டது வழிப்பறி என ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக சுவிஸ் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பல முக்கிய உறுப்புகள்
மிக சமீபத்தில், கடந்த ஜனவரி மாதம், உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட 60 வயது சுவிஸ் சுற்றுலாப் பயணி ஒருவர் செம்னான் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சுவிட்சர்லாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது, ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
பிரன்னர் விவகாரத்தில் ஈரானிய அதிகாரிகள் முழு விசாரணைக் கோப்பையும் சுவிட்சர்லாந்துடன் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டனர், மேலும் அவரது உடல் தாய்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு அவரது பல முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
ஈரானிய அதிகாரிகளால் தான் மிரட்டப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் பிரன்னர் உணர்ந்ததாக சுவிஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர்களின் பொலிசாரால் உதவ முடியவில்லை.
ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் சுவிட்சர்லாந்திற்கு எதிரான தங்கள் உளவுத்துறை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |