கத்தார் உலகக்கோப்பையில் வேல்ஸ் அணிக்கு மரண அடி கொடுத்த ஈரான்! சிவப்பு அட்டை பெற்று வெளியேறிய முதல் வீரர்
அகமது பின் அலி மைதானத்தில் நடந்த போட்டியில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி கட்டத்தில் விழுந்த கோல்கள்
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஈரான் மற்றும் வேல்ஸ் அணிகள் தங்களது இரண்டாவது போட்டியில் இன்று மோதின.
முதல் பாதியில் கோல்கள் விழாத நிலையில், ஆட்டத்தின் 86வது வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் வெய்ன் ஹென்னெஸ்ஸேவுக்கு எதிரணி வீரரை தாக்கியதாக சிவப்பு அட்டை அளிக்கப்பட்டது.
@Reuters
இது வேல்ஸ் அணிக்கு மரண அடியாக விழுந்தது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் வந்த நிலையில், கூடுதல் நேரம் (9) முடியும் தருவாயில் ஈரான் அணி முதல் கோல் அடித்தது.
@Francisco Seco/AP/REX/Shutterstock
அதனைத் தொடர்ந்து வேல்ஸ் அணி சுதாரிப்பதற்குள் அடுத்த கோலையும் ஈரான் அடித்து அதிர்ச்சி கொடுத்தது.
முதல் சிவப்பு அட்டை
இறுதியில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஈரானின் ரௌஸ்பெ சேஷ்மி, ரமின் ரேஸியன் தலா ஒரு கோல் அடித்தனர்.
@FIFAWorldCup
இந்த உலகக்கோப்பையில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறிய முதல் வீரர் வெய்ன் ஹென்னெஸ்ஸே ஆவார்.
@FIFAWorldCup
@FIFAWorldCup