ஈரான் தூதருக்கு சம்மன்: பிரான்ஸ் திட்டம்
Iran closes language center in Tehran, France vows response: பிரெஞ்சு கலாச்சார மையம் ஒன்றை ஈரான் மூடியுள்ளதற்கு தக்க பதிலடி கொடுக்க பிரான்ஸ் திட்டமிட்டுவருகிறது.
பிரான்சுக்கும் ஈரானுக்கும் இடையிலான தூதரக மோதல் மும்முரமாகிவருகிறது. ஜூலை மாதம் 19ஆம் திகதி, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை கைது செய்து காவலில் அடைத்து விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.
அப்போது, அவர்களில் ஒருவரை ஈரான் அதிகாரிகள் தாக்கியதாகவும் தகவல் வெளியானது.
அதைத்தொடர்ந்து, ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை நாட்டை விட்டு வெளியேற்றியது பிரான்ஸ் அரசு.
ஈரான் தூதருக்கு சம்மன்
இந்நிலையில், நேற்று, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிரெஞ்சு கலாசார மையத்தை மூடியுள்ளது ஈரான் அரசு.

பிரான்ஸ் கலாச்சார மையம், தூதரக ஒப்பந்தங்களை மீரும் வகையிலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது ஈரான்.
ஈரானின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரான் மீது தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், பிரான்சுக்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.