குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை: பிரான்சை கேலி செய்யும் ஈரான்
Iranian foreign minister mocking the French government for being unable to manage fridges: பிரான்ஸ் அரசால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் கேலி செய்துள்ளார்.
பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்கு ஈரானை குற்றம் சாட்டியிருந்தது பிரான்ஸ்.
இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தால் குளிர் சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கக் கூட இயலவில்லை என கேலி செய்துள்ளார் ஈரான் வெளியுறவு அமைச்சர்.
பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்
கடந்த மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளாகின.

ஹேக்கர்கள், குளிர்சாதனப்பெட்டிகள், உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளின் வெப்பநிலையை 50 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகின.
உணவுப்பொருட்கள் கெட்டுப்போனதால், அவற்றை முழுமையாக குப்பையில் வீசவேண்டிய நிலை உருவானது.
அத்துடன், வெப்பநிலை அதிகமானதால் சில இடங்களில் தீவிபத்துகளும் ஏற்பட்டன.
ஈரான் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில், பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதன பெட்டிகள் மீதான சைபர் தாக்குதல்களுக்குப் பின்னால், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) இருப்பதாக குற்றம் சாட்டியது பிரான்ஸ்.
தங்கள் உளவுத்துறையும் சைபர் பாதுகாப்பு ஏஜன்சிகளும் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் மின்னணுப் போர் மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடைய ஷாஹித் கவே என்னும் சைபர் பிரிவே இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பு என தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரான்சை கேலி செய்யும் ஈரான் பிரான்சின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரான Seyed Abbas Araghchi சமூக ஊடகமான எக்ஸில் பதிவிட்டுள்ள செய்தி ஒன்றில், தன் நாட்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பது ஒருபுறம் இருக்க, குளிர்சாதனப் பெட்டிகளை நிர்வகிக்கத் தவறிய பிரான்ஸ் அரசு, தனது தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துகிறது என்று கூறியுள்ளார்.
Unable to manage fridges let alone addressing grievances of its people, French government is shifting blame for its failures onto others. Yes, Iran is powerful. But unlike France, we do not exercise power via support for massacres in Gaza or bombings of schools and hospitals.
— Seyed Abbas Araghchi (@araghchi) November 10, 2026
மேலும், ஈரான் சக்தி வாய்ந்ததுதான். ஆனால் பிரான்சைப் போல நாங்கள் காசாவில் நடக்கும் படுகொலைகளுக்கும், மருத்துவமனைகள் மீது குண்டு வீசுவதற்கும் ஆதரவளிப்பதன் மூலம் நாங்கள் எங்கள் அதிகாரத்தைச் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.