ஈரானின் தற்காலிக வெளியுறவு மந்திரியாக அலி பகேரி நியமனம்
ஈரானின் உயர்மட்ட அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் அலி பகேரி (Ali Bagheri) தற்காலிக வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வெளியுறவுத் துறைக்கு நிரந்தர அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவர் தற்காலிக அமைச்சராக இருப்பார்.
ஈரான் அரசு அதன் அதிகாரப்பூர்வ ஊடகம் மூலம் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹைன் (Hossein Amir-Abdollahian) ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 56 வயதான அலி பகேரி தற்காலிகமாக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அமீர் அப்துல்லாஹினின் கீழ் வெளியுறவுத்துறை துணை அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றிய அலி பகேரி, தற்காலிக வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படுவதாக ஈரான் அரசின் பிரதிநிதி அலி பஹதோரி ஜரோமி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran helicopter crash, Iran Foreign Minister, Iran President Ebrahim Raisi, Iran Foreign Minister Hossein Amir-Abdollahian, Iran acting Foreign Minister Ali Bagheri