கத்தாரில் மெளன போராட்டத்தை கைவிட்ட ஈரான் கால்பந்து வீரர்கள்: உயிர் பயம் தான் காரணமா?
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணியை எதிர்கொள்ளும் ஈரான் தேசிய அணி, தங்களது மெளன போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெளன போராட்டத்தில்
நடைபெற்றுவரும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி இன்று வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் 6- 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது ஈரான்.
@reuters
குறித்த போட்டியிலேயே தங்கள் தேசிய கீதத்தை பாட மறுத்து ஈரான் வீரர்கள் மெளன போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விவகாரம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
மட்டுமின்றி, ஈரானின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தேசிய கீதத்தை அவமதிப்பதும் தேசத்தை அவமதிப்பதும் ஒன்று தான் என மிரட்டல் விடுத்திருந்தனர்.
கண்டிப்பாக நடவடிக்கை
மேலும், ஈரான் வீரர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், அதில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தால், கண்டிப்பாக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
@reuters
இந்த நிலையிலேயே வேல்ஸ் அணியுடனான போட்டியின் போது ஈரான் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும், ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு நடுவே, ஈரான் கால்பந்து வீரர்கள் தங்கள் தேசிய கீதத்தை மெதுவாக பாடியுள்ளனர்.
போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு உள்ளேயும் குறிப்பிட்ட சில ரசிகர்கள், ஈரானில் நடந்துவரும் போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை பதாகை மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களை கத்தார் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக எதிர்கொண்டுள்ளனர்.
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள விவகாரம்
மெல்லி அணி என ஈரான் மக்களால் கொண்டாடப்படும் தேசிய கால்பந்து அணிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், திடீரென்று தங்கள் தேசிய கீதத்தை இசைக்க மறுத்து மெளன போராட்டத்தில் இறங்கியதும், விளையாட்டு மேடையை தங்கள் அரசியல் களமாக பயன்படுத்துவதாகவும் சர்ச்சை எழுந்தது.
@getty
இதனிடையே, ஈரானில் நடந்தேறும் போராட்டங்கள் மற்றும், இதுவரை 400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் தேசிய கால்பந்து அணியின் முக்கிய வீரரிடம் வினவியபோது,
தாங்கள் கால்பந்து ஆடும் நோக்கத்தில் கத்தாருக்கு வந்துள்ளதாகவும், தேசிய கீதம் இசைக்க மறுத்த விவகாரத்தில் எந்த அழுத்தமும் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.