பிரான்ஸ் குடிமக்கள் இருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள ஈரான்
ஈரான் நாடு, பிரான்ஸ் குடிமக்கள் இருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பிரான்ஸ் குடிமக்களான Cecile Kohler மற்றும் Chuck Paris என்னும் தம்பதியர் ஈரானுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஈரான் அரசால் கைது செய்யப்பட்டார்கள்.
பிரான்ஸ் உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாகவும், இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது என்றும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ள நிலையில், பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டவர் ஒருவரை விடுதலை செய்ய பிரான்சுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஈரான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், Cecile Kohler மற்றும் Chuck Paris தம்பதியருக்கு ஆளுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல், அதாவது, இருவருக்குமாக மொத்தம் 63 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நீதித்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |