பிரான்ஸ் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த படம்... ஈரான் கடும் கண்டனம்
பிரான்ஸ் நாட்டில் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த ஒரு படம் ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது என்ன படம்?
தெற்கு பிரான்சிலுள்ள Beziers நகரிலுள்ள பேருந்துகளில் குப்பைகளை வெவ்வேறாக பிரித்து போடுவதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், குப்பைகளை பிரித்து போட மறக்காதீர்கள் என எழுதப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், ஈரானின் உச்ச தலைவரான கமேனி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜான் உன் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாக, ஈரான் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தில் மேற்கு ஐரோப்பாவுக்கான டைரக்டர் ஜெனரலாக பொறுப்பு வகிக்கும் Majid Nili, அந்த பிரெஞ்சு நகரத்தின் செயல் தங்கள் நாட்டின் புனிதத்தன்மையையும் தங்கள் நாட்டவர்களையும் அவமதிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கோபத்தைத் தூண்டும் செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் பிரான்ஸ் அரசையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |