சுவிஸ் தூதருக்கு ஈரான் சம்மன்: தவறான கொடி முதல் பல்வேறு காரணங்கள்
ஈரானுக்கான சுவிஸ் தூதருக்கு, ஈரான் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சுவிஸ் தூதரகம் வெளியிட்ட ட்வீட் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
சர்ச்சையை உருவாக்கியுள்ள ட்வீட்
ஈரானிய இளம்பெண் Mahsa Amini கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டங்களுடன் தொடர்புடைய மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, ஈரானிலுள்ள சுவிஸ் தூதரகம், அந்த ட்வீட்டை ஃபார்ஸி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது.
#Iran | We strongly condemn the executions this morning of three men in connection with the protests following the death of Mahsa Amini in September 2022.
— Swiss MFA (@SwissMFA) May 19, 2023
?? urges Iran to stop these executions & to take steps to reduce the use of the death penalty.
?? https://t.co/Dcn3A7mw02
அதில், ஈரான் அந்த மூன்று பேரைத் தூக்கிலிட்டதற்கு சுவிட்சர்லாந்து கண்டனம் தெரிவித்திருந்ததுடன், மரண தண்டனையை குறைக்க ஈரான் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
தவறான கொடி
அந்த ட்வீட் தற்போது ஈரானில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்று, அந்த ட்வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள ஈரான் கொடி, இப்போது ஈரானில் பயன்படுத்தப்படும் தேசிய கொடி அல்ல. அது, மன்னராட்சியைக் குறிக்கும் பழைய கொடி. இப்போது ஈரான் கொடியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அந்த ட்வீட் ஒரு அத்துமீறும் செயல் என ஈரான் ஊடகங்கள் விமர்சித்துள்ளதுடன், ஈரானுடைய உள் விவகாரங்களில் சுவிட்சர்லாந்து தலையிடுவதற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
وزارت خارجه #سوئیس اعدام صبح امروز سه مرد در #ایران را، در رابطه با اعتراضاتِ متعاقبِ مرگ مهسا امینی در سپتامبر ۲۰۲۲ ، شدیداً محکوم مینماید.
— Swiss Embassy Iran (@SwissEmbassyIr) May 19, 2023
?? مؤکداً از ایران میخواهد تا این اعدامها را متوقف کرده و در راستای کاهش استفاده از حکم #اعدام قدم بردارد. pic.twitter.com/jqjaKiH9yB
ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரானுடைய உள் விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து விமர்சிக்க அதிகாரம் இல்லை என்றும், மேற்கத்திய நாடுகளின் அரசியல்வாதிகள், மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு பதிலாக தங்கள் நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வெளியிட்ட அந்த ட்வீட்டைத் தொடர்ந்தே ஈரானுக்கான சுவிஸ் தூதருக்கு ஈரான் சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
credit: REUTERS/COSTAS BALTAS