ஈரானில் சுவிஸ் தூதர் மர்மமான முறையில் மாடியிலிருந்து விழுந்து மரணம்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மூத்த உறுப்பினர் ஒருவர், அவர் வசித்து வந்த உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
51 வயதான பெண் தூதர், தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளராக இருந்துள்ளார், ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களை சுட்டிக்காட்டி, அவரது மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து எந்த தகவலையும் தூதரகம் கொடுக்கவில்லை.
அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தான் வசித்து வந்த மிக உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஒரு தூதரக ஊழியர் அவரது குடியிருப்பில் வந்து பார்த்தபோது, அவர் அங்கு இல்லை என தெரியவந்ததாகவும், பின்னர் சுற்றுப்புறத்தில் தேடியபோது ஒரு தோட்டக்காரரால் தூதரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஈரானிய அவசர சேவை செய்தித் தொடர்பாளர் மொஜ்தாபா கலேடி (Mojtaba Khaledi) கூறியுள்ளார்.
இது ஒரு விபத்து என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் Federal Department of Foreign Affairs கூறியுள்ளது. மேலும், அவரது குடுபத்துக்கு இரங்கல் தெறிவிப்பதாக FDFA தலைவர் Ignazio Cassis தெரிவித்துள்ளார்.