ஈரான் போர் குறித்த சமூக ஊடகப் பதிவு... ஐக்கிய அமீரகத்தில் கைதான இந்தியர்கள்

United Arab Emirates Indian Origin Iran-Israel War
By Arbin Mar 16, 2026 04:10 AM GMT
Report

ஈரான் மீதான போர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் கருத்துகள் தொடர்பில் 19 இந்தியர்கள் உட்பட இதுவரை 35 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

விரைவான விசாரணை

கைதானவர்கள் அனைவரும் சமூக ஊடகளைப் பயன்படுத்தி பிராந்திய பதட்டங்களுடன் தொடர்புடைய திரிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் கருத்துகளைப் பரப்பியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் விரைவான விசாரணையை எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் போர் குறித்த சமூக ஊடகப் பதிவு... ஐக்கிய அமீரகத்தில் கைதான இந்தியர்கள் | Iran War Big Action Uae Indians

இந்த நடவடிக்கை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்திய பட்டியலில், 17 இந்தியர்கள் உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 நபர்கள், வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணையை எதிர்கொள்ள உள்ளனர்.

சனிக்கிழமையன்று பெயர் அறிவிக்கப்பட்டு, கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட, இரண்டு இந்தியர்கள் உட்பட, 10 பேர்கள் மீது வேறு பிரிவுகளின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.

உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

வெளியான அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை சட்டத்தரணி டாக்டர் ஹமாத் சைஃப் அல் ஷம்ஸ் குறிப்பிடுகையில், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் மற்றும் பொது ஸ்திரத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் புனையப்பட்ட தகவல்கள் மற்றும் திரிக்கப்பட்ட கருத்துகள் பரவுவதை எதிர்த்து டிஜிட்டல் தளங்களை கடுமையாக கண்காணிப்பதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

100,000 திர்ஹாம் அபராதம்

கைதான முதல் 10 பேர்களில் ஐவர் இந்தியர்கள் எனவும், பாகிஸ்தான், எகிப்து, நேபாளத்தில் இருந்து தலா ஒருவர் எனவும் இருவர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் எனவும், இவர்கள் ஈரான் தாக்குதலைப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது கைதான குழுவில் ஐந்து இந்தியர்கள் உட்பட 7 பேர்கள், திருத்தப்பட்ட காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

ஈரான் போர் குறித்த சமூக ஊடகப் பதிவு... ஐக்கிய அமீரகத்தில் கைதான இந்தியர்கள் | Iran War Big Action Uae Indians

மூன்றாவது குழுவில் ஐந்து இந்தியர்கலும் ஒரு பாகிஸ்தான் நாட்டவரும் ஈரானின் நடவடிக்கையைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு இந்தியர்கள் இதே வழக்கில் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 100,000 திர்ஹாம் அபராதமும் விதிக்கப்படும் சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US