நீளும் ஈரான் போர்... அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் புதிய பீதியில் அதிகாரிகள்

Israel-Iran conflict
By Arbin Mar 04, 2026 10:33 PM GMT
Report

ஈரானுடனான நீடித்த போர் அமெரிக்க வான் பாதுகாப்பு ஆயுதங்களை வீணாக்கி, ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்ற அச்சத்தை பென்டகன் அதிகாரிகள் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மிகப்பெரிய கவலை

ஈரான் மீதான தாக்குதல் நான்கு அல்லது ஐந்து வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார், ஆனால் இராணுவம் இன்னும் நீண்ட காலம் போரிடத் தயாராக உள்ளது.

நீளும் ஈரான் போர்... அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் புதிய பீதியில் அதிகாரிகள் | Iran Warning Pentagon Secret Panic

இந்த நிலையில், அமெரிக்காவிடம் ஆயுதங்கள் விரைவாக தீர்ந்து போவதால், போரை இழுத்தடிப்பது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறக்கூடும் என்று இராணுவ ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

வெளியான தகவலின் அடிப்படையில், போர் தொடங்கியதிலிருந்து உயர்மட்ட அதிகாரிகளிடையே இருந்த மிகப்பெரிய கவலை என்பது, ஈரான் மீதான போர் ஒரு பெரிய பிராந்திய மோதலாக மாறிவிடும் என்பதுதான்.

ஏனென்றால் அமெரிக்கா அதன் ஏவுகணை விநியோகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை விரைவாகக் குறைத்து வருகிறது. பென்டகன் அதிகாரிகள் தங்கள் அச்சத்தை ரகசியமாக பதிவு செய்த நிலையிலேயே, இராணுவத்தினருக்கான பாதுக்காப்பில் அதிகரித்த நடவடிக்கைகள் அமுலுக்கு வந்தன.

ஈரானின் Shahed ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முடியவில்லை... ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்

ஈரானின் Shahed ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முடியவில்லை... ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்

முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அமெரிக்காவால் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த, Interceptor ஏவுகணைகளின் எண்ணிக்கை வேகமாக சரிவடைந்து வருவதும், ஈரானின் மலிவான ஷாஹெத் ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும்தான் இந்த மோதலின் முக்கிய பிரச்சினை.

அமெரிக்க இராணுவம் பேட்ரியாட் ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்தி க்ரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்கிறது.

இந்த நிலையில், 1000 ஷாஹெத் ட்ரோன்களை செலவிட்டு, அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வைத்துவிடுவார்கள் என தாம் கருதுவதாக ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீளும் ஈரான் போர்... அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் புதிய பீதியில் அதிகாரிகள் | Iran Warning Pentagon Secret Panic

ஈரானுக்கு எதிராக THAAD அமைப்பையும் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் இராணுவ முகாம்களை ஷாஹெத் ட்ரோன்களாலையே ஈரான் தாக்கியுள்ளது.

ஷாஹெத் ட்ரோன்களை முறியடிக்க முடியவில்லை என அதிகாரிகள் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்க துருப்புக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக களத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இது ஒரு திகிலூட்டும் யதார்த்தமாகும்.

வரம்பற்ற எண்ணிக்கை

ஒரு ஷாஹெத் ட்ரோனுக்கான உற்பத்தி செலவு சுமார் 35,000 டொலர். அதேவேளை ஒவ்வொரு பேட்ரியாட் அமைப்பின் செலவு 4 மில்லியன் டொலர். மட்டுமின்றி, ஒவ்வொரு THAAD அமைப்பின் செலவு சுமார் 13 மில்லியன் டொலர்.

அமெரிக்காவின் Tomahawk ஏவுகணைக்கான உற்பத்தி செலவு 2 மில்லியன் டொலருக்கும் அதிகம். தற்போது ஈரானில் பயன்படுத்தப்படும் கிராவிட்டி குண்டுகள் ஒன்றின் விலை தோராயமாக 25,000 டொலர்.

அமெரிக்காவிடம் இந்த ஆயுதங்கல் வரம்பற்ற எண்ணிக்கையில் இல்லை. ஆனால், இந்த ஆயுதங்கள் விரைவாகக் குறைந்து வருவது ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.

நீளும் ஈரான் போர்... அமெரிக்க இராணுவத் தலைமையகத்தில் புதிய பீதியில் அதிகாரிகள் | Iran Warning Pentagon Secret Panic

திங்களன்று தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ட்ரம்ப், அமெரிக்காவிடம் வரம்பற்ற எண்ணிக்கையில் ஆயுதங்களின் இருப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.

உண்மையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் தற்போது தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், பென்டகன் ஒரு நீண்டகால போருக்குத் தயாராவதற்காக, அந்தப் பிராந்தியத்தில் இரகசியமாகவும் விரைவாகவும் ஆயுதங்களை நிலைநிறுத்தி வருகிறது.

பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை ஆண்டுக்கு 600ல் இருந்து 2,000 என உற்பத்தியை உயர்த்த Lockheed Martin நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவு செய்தது.

THAAD அமைப்பின் உற்பத்தியை 96ல் இருந்து 400 என உயர்த்தவும் Lockheed Martin நிறுவனம் உறுதி அளித்தது. 2015 முதல் 2014 வரையில் சராசரியாக ஆண்டுக்கு 270 பேட்ரியாட் அமைப்பை மட்டுமே Lockheed Martin நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US