ஆண் வேடமிட வேண்டாம்! ஈரானில் பெண்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி
ஈரானில் கால்பந்து போட்டிகளைக் நேரில் காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பெண்களுக்கு அனுமதி
ஈரானில் பெண்கள் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பது அரிது, ஆனால் இப்போது அவர்கள் அடுத்த சீசனில் மைதானங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) பெண்கள் மைதானங்களில் கால்பந்து போட்டிகளைக் காண அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ் தெரிவித்துள்ளார்.
AP
செயற்குழு நியமனம்
"பெண்கள் மைதானங்களுக்குச் செல்லலாம், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அத்தகைய முடிவை எடுத்துள்ளது" என்று தாஜ் வெள்ளிக்கிழமை கூறினார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாக செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம், விளையாட்டு மற்றும் இளைஞர் கொள்கை அமைச்சகம், கால்பந்து கூட்டமைப்பு மற்றும் தகவல் அமைச்சகத்தின் இரண்டு அமைப்புகள் இந்த வேலையைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்கி வருவதாக தாஜ் கூறியுள்ளார்.
AFP
ஆண்களைப் போன்று வேடமிட்டு வரும் பெண்கள்
கால்பந்து ஈரானின் மிகவும் பிரபலமான பார்வையாளர் விளையாட்டாகும். Team Melli என அழைக்கப்படும் ஈரானின் தேசிய கால்பந்து அணிக்கு நாட்டில் பெரும் ஆதரவு உள்ளது. ஆனால் பெண்கள் அந்த விளையாட்டுகளை நேரிலோ அல்லது உணவகங்கள் போன்ற பொது இடங்களிலோ பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சில சமயங்களில் ஆண்களைப் போன்று வேடமிட்டு, ஒட்டி தாடி, மீசையுடன் போட்டியைக் காண வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Iran, Women Allowed in Football, Soccer, Football Matches in Stadium