உடலிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இரானி டீ.., இலகுவாக எப்படி செய்வது?
அன்றாட நாம் தேநீர் குடிப்பது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தினமும் சாதாரண டீ குடிப்பதற்கு பதிலாக இந்த சுவையான இரானி டீ குடிப்பது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
அந்தவகையில், உடலிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இரானி டீ எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- டீ தூள்- 2 ஸ்பூன்
- பால்- ½ லிட்டர்
- சர்க்கரை - 2 ஸ்பூன்
- கன்டென்ஸ்டு மில்க் - 2 ஸ்பூன்
- ஏலக்காய் - 2 தண்ணீர் - 2 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் டீ தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடாக்கவும்.
பின் பாத்திரத்தை காற்று புகாத அளவு இறுக்கமாக மூடி 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
அடுத்து மற்றோரு பாத்திரத்தில், பால் சேர்த்து சூடாக்கி இதில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இதற்கடுத்து இதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
இறுதியாக ஒரு டம்ளரில் செய்துவைத்த டீ டிகாஷன் ஊற்றி, இதன் மேல் பால் ஊற்றினால் போதும் இரானி டீ தயார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |