வெளிப்படையாக கூறிய வார்த்தை... மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரபல கால்பந்து நட்சத்திரம்
ஈரானில் பெண்கள் உரிமைக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து நட்சத்திரம் Amir Nasr-Azadani
குறித்த தகவலை, உலகெங்கிலும் உள்ள சுமார் 65,000 கால்பந்து நட்சத்திரங்கள் உறுப்பினர்களாக கொண்ட FIFPRO என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் பிரபல கால்பந்து நட்சத்திரமான Amir Nasr-Azadani என்பவரே தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
குறித்த தகவலை அறிந்து FIFPRO அமைப்பு நிர்வாகம் அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இளம்பெண் ஒருவர் பொலிசாரால் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவத்தை அடுத்து, வெடித்த ஆர்ப்பாட்டங்களில் பிரபலங்கள் பலர் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.
திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு, ஊடக நட்சத்திரங்கள் என பலர் தங்கள் ஆதரவையும் ஈரானின் கொள்கைகளுக்கு எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் கால்பந்து நட்சத்திரமான Amir Nasr-Azadani தொடர்புடைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதையும் தமது ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை
இந்த நிலையில் நவம்பர் 20ம் திகதி அமீர் மற்றும் இருவர் ஊடகத்தில் தோன்றி, கட்டாயத்தின் பேரில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், ராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டதற்கு தாங்களும் காரணம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
@reuters
ஆனால், சம்பவம் நடந்த போது கால்பந்து நட்சத்திரம் அமீர் அந்த பகுதியில் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டது உண்மை தான் என்றாலும், சில மணி நேரம் மட்டுமே அவர் கலந்துகொண்டதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் ஆதரித்து அவர் முழக்கமிட்டதாகவும் கூறுகின்றனர்.
ஈரான் நிர்வாகம் திட்டமிட்டே, அமீரை சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் FIFPRO அமைப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும், அமீருக்கு ஆதரவாக FIFPRO அமைப்பு உறுதியுடன் செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.