லண்டனில் ஈரானிய செய்தியாளருக்கு கத்திக்குத்து! பிரித்தானிய காவல்துறை விசாரணை
லண்டனில் உள்ள தனது வீட்டின் வெளியே ஈரானிய செய்தியாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய செய்தியாளருக்கு கத்திக்குத்து
பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை, லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே வெள்ளிக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட ஈரானிய பத்திரிகையாளர் மீதான தாக்குதலை விசாரித்து வருகிறது.
ஈரான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஈரானிய செயற்கை கூறு தொலைக்காட்சி சேனலான ஈரான் இன்டர்நேஷனலின்(Iran International) செய்தியாளர் பூரியா ஜெராதி(Pouria Zeraati, 30), தெற்கு லண்டனின் விம்பிள்டன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டின் அருகே மதியம் 2.49 மணி அளவில் கத்தியால் குத்தப்பட்டார்.
ஜெராதி மருத்துவ கவனிப்புக்குப் பிறகு தற்போது நிலையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஜெராதியின் தொழில் மற்றும் அரசாங்கத்தின் மீதான சேனலின் விமர்சன நிலைப்பாடு காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியுபவர்கள் தனது விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |