வெளியேற்றிய பிரித்தானியா... 18 ஆண்டுகள் விமான நிலையத்திலேயே வசித்தவர் மரணம்

Refugee Paris Death
By Arbin Nov 13, 2022 08:10 AM GMT
Report

பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தையே கடந்த 18 ஆண்டுகளாக குடியிருப்பாக மாற்றிய ஈரானியர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானியரான மெஹ்ரான் கரிமி நசேரி சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத இராஜாங்க சிக்கலில் சிக்கிக்கொள்ள, 1988 முதல் பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

வெளியேற்றிய பிரித்தானியா... 18 ஆண்டுகள் விமான நிலையத்திலேயே வசித்தவர் மரணம் | Iranian Lived Paris Airport 18 Years Dies

@getty

தாயாரை கண்டுபிக்க ஐரோப்பாவுக்கு

மேலும், இவரது நிலை அறிந்து பிரான்ஸ் நிர்வாகம், குடியிருப்பு அனுமதி வழங்கியது. ஆனால் சில வாரங்கள் முன்பு மீண்டும் அவர் விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளார். இந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மரணம் இயற்கையானது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் Khuzestan பகுதியில் பிறந்த நசேரி, தமது தாயாரை கண்டுபிடிக்கும் நோக்கிலேயே முதன் முறையாக ஐரோப்பாவுக்கு வந்துள்ளார்.

வெளியேற்றிய பிரித்தானியா... 18 ஆண்டுகள் விமான நிலையத்திலேயே வசித்தவர் மரணம் | Iranian Lived Paris Airport 18 Years Dies

@getty

பின்னர் சில காலம் பெல்ஜியத்தில் வசித்து வந்துள்ளார். ஆனால் முறையான ஆவணங்கள் ஏதுமில்லை என்ற காரணத்தால், பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் இருந்தும் நசேரி வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடைசியாக பிரான்ஸ் சென்ற அவர், விமான நிலையத்தில் 2எஃப் டெர்மினலின் ஒரு சிறிய பகுதியை தமது குடியிருப்பாக மாற்றியுள்ளார். இறுதி நாட்களில் அவர் தமது வாழ்க்கை தொடர்பில் குறிப்புகளாக எழுதி வந்துள்ளதாகவும், புத்தகங்கள் மற்றும் நாளேடுகளை வாசித்து நேரம் செலவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

The Terminal என்ற திரைப்படமாக

இவரது கதையே, Stephen Spielberg இயக்கத்தில் The Terminal என்ற திரைப்படமாக வெளிவந்து பெரும் ஆதரவை பெற்றது. ஆனால் அந்த திரைப்படம் வெளியான பின்னர், பலரது கவனமும் இவர் மீது திரும்ப, ஊடகங்கள் இவரை மொய்த்துக்கொண்டது.

வெளியேற்றிய பிரித்தானியா... 18 ஆண்டுகள் விமான நிலையத்திலேயே வசித்தவர் மரணம் | Iranian Lived Paris Airport 18 Years Dies

@getty

1999ல் இவருக்கு அகதி அந்தஸ்து அளித்து, பிரான்சில் குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டாலும், 2006 வரையில் பாரிஸ் விமான நிலையத்திலேயே தங்கி வந்துள்ளார். இதனிடையே நசேரி நோய்வாய்ப்பட, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் விடுதி ஒன்றில் சில காலம் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், சில வாரங்கள் முன்பு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பிய நசேரி, இறக்கும் வரையில் தமக்கு பிடித்தமான அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இறந்த பின்னர், நசேரியின் வசமிருந்து பல ஆயிரம் யூரோக்கள் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US