ஈரானிய எண்ணெய்... இந்தியாவிற்கு சிறப்பு சலுகை அளிக்கவும் தயார்: வெளிவரும் புதிய தகவல்
ட்ரம்ப் நிர்வாகம் தற்காலிகமாகத் தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு ஈரானிய எண்ணெயை ICE Brent விலையை விட அதிக விலையில் விற்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாதம் அவகாசம்
உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராகவும் நுகர்வோராகவும் திகழும் இந்தியா, ஈரானிய கச்சா எண்ணெயை வாங்க வேண்டாம் என அமெரிக்கா அளித்த அழுத்தத்தின் காரணமாக, மே 2019-க்குப் பிறகு ஈரானிடமிருந்து எந்தவொரு இறக்குமதியும் பெறவில்லை.

ஆனால், தற்போது ஈரான் போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட இடையூறுகளால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புவியியல் ரீதியாக இந்தியாவிற்கு அருகாமையில் அமைந்துள்ள ஈரானிடமிருந்து, எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் கொள்முதலை அதிகபட்சமாக்க, அதன் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு டஹ்ற்போது ஒரு மாதம் அவகாசம் கிட்டியுள்ளது.
எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கும் முயற்சியாக, ரஷ்யா மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே மில்லியன் கணக்கான பீப்பாய் ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளன.
இந்த நிலையில், வர்த்தகர்களும் தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனமும் டொலர்களில் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று கோருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

6 முதல் 8 டொலர் வரை
மேலும், சில வர்த்தகர்கள் இந்திய ரூபாய்களிலும் பணம் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போதைய இந்த நெருக்கடியானது, 1970-களில் ஏற்பட்ட இரண்டு எண்ணெய் நெருக்கடிகளை விடவும் மிகவும் மோசமானது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஏற்கனவே கடலில் உள்ள ஈரானிய எண்ணெயை வாங்குவதற்கு, 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கும் வகையிலான பொருளாதாரத் தடை விலக்கை ட்ரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்ததாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.

மேலும், தடைக்கு உட்பட்ட எண்ணெய் கப்பல்கள் உட்பட, எந்தவொரு கப்பலிலும் ஏற்றப்பட்டுள்ள எண்ணெய்க்கு இந்த விலக்கு பொருந்தும்.
வெளியான தகவலின் அடிப்படையில், ஈரானிய எண்ணெய், ICE Brent விலையை விட ஒரு பீப்பாய்க்கு 6 முதல் 8 டொலர் வரை கூடுதல் விலையில் வழங்கப்பட உள்ளது; இதற்கான கட்டணம் சரக்கு வந்தடைந்த ஏழு நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |