சுவிஸ் பயணத்தை திடீரென ரத்து செய்த ஈரான் ஜனாதிபதி: கைது பயம் காரணமாம்...
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், இன்று முதல் உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் சந்திப்பு ஒன்று நடைபெற உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ஈரான் ஜனாதிபதி, திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
உலகளாவிய அகதிகள் மன்றம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், இன்று, அதாவது, டிசம்பர் 13ஆம் திகதி முதல், 15ஆம் திகதி வரை, முதல் உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் நிகழ்வு நடைபெற உள்ளது.
உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில், ஈரான் சார்பில் கலந்து கொள்ளும் குழுவின் தலைவராக, ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi ஜெனீவா செல்ல திட்டமிட்டிருந்தார்.
பயணம் திடீர் ரத்து
ஆனால், அவர் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். அதற்குக் காரணம், ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisiயைக் கைது செய்ய அவரது எதிரணியைச் சேர்ந்த மூன்று பேர் சுவிஸ் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆகவே, Ebrahim Raisi ஜெனீவா செல்லும் நிலையில் கைது செய்யப்படலாம் என்பதாலேயே, அவர் திடீரென தனது பயணத்தை ரத்துசெய்துவிட்டதாக கருதப்படுகிறது.
Ebrahim Raisi ஈரானின் டெஹ்ரான் மாகாண அரசின் துணைத்தலைவராக இருந்தபோது, இனப்படுகொலை மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |