பிரித்தானியாவில் பத்திரிகையாளர்களை உளவு 3 ஈரானிய குடிமக்கள்: விசாரணை தொடங்கிய நீதிமன்றம்
பிரித்தானியாவில் பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாக கூறப்படும் வழக்கில் 3 ஈரானிய குடிமக்கள் மீதான நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது.
உளவு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 ஈரானிய குடிமக்கள்
ஈரானுக்கு உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் முஸ்தபா செபஹ்வந்த், பர்ஹாத் ஜவாதி மானேஷ் மற்றும் ஷாபூர் கலேஹலி கானி நூரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 3 பேரும் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2025 ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

உளவாளிகளின் முக்கிய நோக்கங்கள்
ஈரானிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் நபர்களை உளவு பார்ப்பது மற்றும் அச்சுறுத்துவதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.
மேலும் இவர்கள் இலக்கு வைத்த நபர்களில் யாரேனும் ஒருவரையாவது வன்முறைக்குள் உட்படுத்துவதே இவர்களின் இலக்காகவும் இருந்துள்ளது.
இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட மூவரிடமும் செவ்வாய்க்கிழமை வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.