இந்திய ரயில் பயணிகளுக்கு Zomato உணவு; IRCTC உடன் ஒப்பந்தம்
ரயில்வே பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய ரயில் பயணிகளுக்காக ஏற்கனவே பல வகையான சேவைகளை வழங்கி வரும் ஐஆர்சிடிசி, மற்றொரு புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இனிமேல், ரயில்வே பயணிகளுக்கு Zomato செயலி மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக Zomata நிறுவனத்துடன் IRCTC ஒப்பந்தம் செய்துள்ளது. பயணிகளுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவை நேரடியாக இருக்கைக்கு டெலிவரி செய்யும் வசதி வழங்கப்படும்.
தற்போது இந்த சேவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நிலையங்களில் வழங்கப்படுகின்றன. விரைவில் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் Zomato சேவைகளை விரிவுபடுத்த உள்ளனர்.
இ-கேட்டரிங் சேவைகளின் கீழ் பயணிகளுக்கு உணவை ஆர்டர் செய்யும் வசதியை வழங்கும் ஐஆர்டிசி, இப்போது இந்த திசையில் Zomato உடன் கைகோர்த்து மற்றொரு அடியை எடுத்துவைத்துள்ளது என்று சொல்ல வேண்டும்.
தற்போது புது டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ரயில் நிலையங்களில் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. பின்னர், பயணிகளிடம் இருந்து பெறப்படும் வரவேற்பின் அடிப்படையில் இந்த சேவைகள் மற்ற நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்கிடையில், ஐஆர்சிடிசி ஏற்கனவே பண்டிகை காலத்தின் பின்னணியில் சிறப்பு சலுகைகளை கொண்டு வந்துள்ளது. நவராத்திரியை முன்னிட்டு விரதம் இருப்பவர்களுக்கு Special Thali உணவு பரிமாறப்படுகிறது.
இதற்கிடையில், IRCTC உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு Zomato பங்குகளில் மாற்றங்கள் காணப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
IRCTC ties up with Zomato, IRCTC Zomato Deal, Zomato Foods in Trains, Indian Railway Catering and Tourism Corporation Ltd, Indian Railways partner with Zomato