5 ஓட்டங்களில் முதல் சதத்தை தவறவிட்ட கேப்டன்! ரன்வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்ட இலங்கை வீரர்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து கேப்டன் பால்பிரிணி 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
ஸ்டிர்லிங் முதல் அரைசதம்
காலேவில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி ஓட்டங்களை குவித்து வருகிறது. கேப்டன் பால்பிரிணி மற்றும் ஸ்டிர்லிங் ஜோடி நங்கூரம் போல் நின்று ஆடியது.
தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை கடந்த ஸ்டிர்லிங் 74 ஓட்டங்களில், தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் பெவிலியன் திரும்பினார்.
@cricketireland
சதத்தினை தவறவிட்ட கேப்டன் பால்பிரிணி
சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த பால்பிரிணி 95 ஓட்டங்களில் ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தினை தவறவிட்டார்.
@cricketireland
அவரது விக்கெட்டைத் தொடர்ந்து லோர்கன் டக்கர் மற்றும் கர்டிஸ் காம்பர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.
@cricketireland
@cricketireland