இரண்டு அரைசதங்கள், ஆப்கனை அடித்து நொறுக்கிய அயர்லாந்து!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பெல்பாஸ்டில் நடந்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கணி 42 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார்.
Getty Images
அயர்லாந்து தரப்பில் மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளையும், டாக்ரெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் ஆண்ட்ரு பல்பிரின் 38 பந்துகளில் 51 ஓட்டங்களும், டக்கர் 32 பந்துகளில் 50 ஓட்டங்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நபி, நவீன் உல் ஹக் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
insidesport
Twitter
insidesport