இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த மழை! 5 ஓட்டங்களில் பறிபோன வெற்றி..கொந்தளித்த ரசிகர்கள்
அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிரினி ஆட்ட நாயகன் விருது பெற்றார்
அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன் 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பால்பிரினி 62 ஓட்டங்களும், டக்கர் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களுக்குள் தொடக்க விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதன் பின் களமிறங்கிய அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை பின் ஹேண்ட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய ப்ரூக் 18 ஓட்டங்களிலும், டேவித் மாலன் 35 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
Getty
மொயீன் அலி அதிரடியாக 24 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். அணியின் ஸ்கோர் 105-5 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் D/L விதிமுறையின்படி அயர்லாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவு இங்கிலாந்து வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. நடப்பு உலகக்கோப்பையில் பல போட்டிகளில் மழை குறுக்கிட்டு வருகிறது.
இதனால் போட்டி தடைபடுவது, முடிவு மாறுவது என சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவுஸ்திரேலியாவில் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
AP/PTI