32 பந்துகளில் 72 ஓட்டங்கள் விளாசல்! ருத்ர தாண்டவம் ஆடிய இளம்வீரர்
23 வயதாகும் கேம்பருக்கு இது முதல் சர்வதேச அரைசதம் ஆகும்
72 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கேம்பர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜோன்ஸ் 86 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கர்டிஸ் கேம்பர் மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
அவருக்கு உறுதுணையாக ஜார்ஜ் டாக்ரெல் அதிரடி காட்டினார். இந்த கூட்டணி 119 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் அயர்லாந்து அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
Campher takes charge!
— ICC (@ICC) October 19, 2022
We can reveal that this 6 from Curtis Campher is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Scotland vs Ireland.
Grab your pack from https://t.co/nUhkKiB38q to own iconic moments from every game. pic.twitter.com/CL1PS9LzSG
கர்டிஸ் கேம்பர் 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும், டாக்ரெல் 27 பந்துகளில் 39 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர். அயர்லாந்து அணி தனது அடுத்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 21ஆம் திகதி சந்திக்கிறது.
Twitter (@cricketireland)
All the way back in 2007, Misbah-ul-Haq and Shoaib Malik put on 119* in a special T20 World Cup win for Pakistan.
— Cricket Ireland (@cricketireland) October 19, 2022
Today, Curtis Campher and George Dockrell equalled them ?#BackingGreen #T20WorldCup ☘️? pic.twitter.com/fQg8pGdLYu