முதல் டெஸ்டிலேயே சதம் விளாசிய வீரர்! பிரம்மாண்ட சாதனை
அயர்லாந்து கிரிக்கெட் அணி வீரர் லோர்கன் டக்கர் தனது அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்
அயர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து 214 ஓட்டங்களும், வங்கதேசம் 369 ஓட்டங்களும் எடுத்தன.
அதன் பின்னர் 155 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி அயர்லாந்து விளையாடி வருகிறது.
@Getty Images
லோர்கன் டக்கர் சதம்
அந்த அணியின் விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர், 7வது வரிசையில் களமிறங்கி 108 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 112வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.
@Firoz Ahmed
மேலும் 7வது வரிசையில் களமிறங்கி சதம் அடித்த 9வது கிரிக்கெட் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
டக்கர் 35 ஒருநாள் போட்டிகளில் 517 ஓட்டங்களும், 52 டி20 போட்டிகளில் 885 ஓட்டங்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lorcan Tucker continues to fight on and has put Ireland in the lead ?
— ICC (@ICC) April 6, 2023
Follow #BANvIRE: https://t.co/kX4vEEWaXG pic.twitter.com/KYBl0RIFVL