பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்த அயர்லாந்து அணி
டப்லினில் நடந்த முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாபர் அசாம் 57
பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டப்லினில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் பாபர் அசாம் 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.
3️⃣5️⃣th T20I fifty for Pakistan captain @babarazam258 ?#IREvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/YUPVMr9ikT
— Pakistan Cricket (@TheRealPCB) May 10, 2024
அயர்லாந்து வெற்றி
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 8 ஓட்டங்களிலும், டக்கர் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டெக்டர் 27 பந்துகளில் 36 ஓட்டங்களும், டக்கெரல் 12 பந்துகளில் 24 ஓட்டங்களும் விளாசினர்.
அதிரடியில் மிரட்டிய ஆண்ட்ரூ பால்பிரிணி 55 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
எனினும் டெலனி (10), காம்பர் (15) ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர். இரண்டாவது டி20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |